இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஏப்ரல் மாத முதலாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2015-03-26

2015, மார்ச் 24 மற்றும் ஏப்ரல் 06ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 ஏப்ரல் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2015 ஏப்ரல் 07 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 உள்நாட்டு திறைசேரி உண்டியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(இவ்விடயம் நிலையியற் கட்டளை 23 இன் கீழ் அலுவல் பிரேரணையாக 2015.04.07ஆம் திகதிய 446ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2015 ஏப்ரல் 08 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(இவ்விடயம் 2015.03.24ஆம் திகதிய 445ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 6ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவதோடு, இப்பிரேரணை 2015.03.20ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 13(10) ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (ஜதேமு)
 

2015 ஏப்ரல் 09 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 07.30 அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(இச்சட்டமூலம் 2015.03.24 ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
 

2015 ஏப்ரல் 10 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 அரசியலமைப்புக்கான பத்தொன்பதாம் திருத்தச் சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு தொடரப்படவுள்ளது

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom