இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2015-02-11

2015, பெப்ரவரி 10ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2015 பெப்ரவரி மாத இரண்டாம் அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது

2015 பெப்ரவரி 17 செவ்வாய்க்கிழமை

பாராளுமன்ற அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம்)
 

2015 பெப்ரவரி 18 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2015.02.10ஆம் திகதிய 433 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)
 

2015 பெப்ரவரி 19 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டமூலம் — இரண்டாம் மதிப்பீடு
(இவ்விடயம் 2015.02.10ஆம் திகதிய 433 ஆம் இலக்க ஒழுங்குப்பத்திரத்தில் 3 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகிறது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)
 

2015 பெப்ரவரி 20 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30 வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (அவசர சட்டமூலம்)இச்சட்டமூலம் 2015.02.10 ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom