510/2025
கௌரவ மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) ஜீ.டி.சூரியபண்டார,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சணச அபிவிருத்தி வங்கி, இலங்கை மத்திய வங்கியின் ஒழுங்குறுத்தலுக்கு உட்பட்டதா;
(ii) சணச அபிவிருத்தி வங்கி மூலம் ஓய்வுபெற்ற இராணுவ உத்தியோகத்தர் களுக்கு "உத்தமாசார" என்ற பெயரில் கடன் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளதா;
(iii) அதன் கீழ் இதுவரை கடன் வழங்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தக் கடன் தொகை யாது;
(iv) 2020 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை கடன் வழங்கப்பட்டுள்ள ஆட்களின் எண்ணிக்கை மற்றும் மொத்தக் கடன் தொகை யாது;
(v) கடன் வழங்கும் போது கவனத்தில் கொள்ளப்படுகின்ற ஓய்வூதிய சம்பள வீதம் யாது;
(vi) கடனை மீளச் செலுத்துவதற்கான குறைந்தபட்ச மற்றும் உச்சளவான காலஎல்லை யாது;
என்பதை அவர் தொிவிப்பாரா?
(ஆ) (i) கொவிட்-19 தொற்றுக் காலத்தில் கடனை அறவிட்டுக் கொள்ளும் காலஎல்லை நீடிக்கப்பட்டதன் மூலம் கடன் தொகையை விடவும் கூடுதலான தொகையை வட்டியாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா;
(ii) மேற்படி கால நீடிப்பு வங்கியின் தற்றுணிவின் போில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை அவர் அறிவாரா;
(iii) வங்கியின் தற்றுணிவின் போில் அவ்வாறு நீடிப்புச் செய்யப்பட முடியுமா;
(iv) அதன் மூலம் பாதிக்கப்பட்டுள்ள ஆட்களுக்கு நியாயம் நிலைநாட்டப்படுமா;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






