495/2025
கௌரவ சுசந்த குமார நவரத்ன,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மிகிந்தலை கமநல சேவைகள் ஆளுகைப் பிரதேசத்தில், வரையறுக்கப்பட்ட ஜனதா லங்கா மிளகாய் சந்தைப்படுத்தல் கம்பனி நிறுவப்பட்டுள்ளமையை அறிவாரா என்பதையும்;
(ii) 2001 ஆம் ஆண்டில் மிகிந்தலை கமநல சேவைகள் வங்கியினால் மேற்படி கம்பனிக்கு ரூ.1,275,000/- கடன் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(iii) ஆமெனில், அக்கடன் தொகை வழங்கப்பட்ட அடிப்படை யாதென்பதையும்;
(iv) மேற்படி கடன் தொகை மீள அறவிடப்படுமா என்பதையும்;
(v) ஆமெனில், அறவிடப்படும் அடிப்படை யாதென்பதையும்;
(vi) மேற்படி கடன்தொகைக்காக அறவிடப்பட வேண்டிய ரூ. 1,975,233/- வட்டித் தொகையை அறவிடப்படாதிருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(vii) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : சுசந்த குமார நவரத்ன | |
| : தேசிய மக்கள் சக்தி |