493/2025
கௌரவ பத்மசிறி பண்டார,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) சுதேச மருத்துவப் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்துள்ளவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) இன்றளவில் சுதேச ஆயுர்வேத வைத்தியசாலைகளில் ஆயுர்வேத மருத்துவர்களின் பற்றாக்குறை காணப்படுவதை அறிவாரா என்பதையும்;
(iv) அவ்வாறாயின், அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மின்னேரிய ஆயுர்வேத வைத்தியசாலையில் இயன்முறை மருத்துவ அலகொன்று இயங்குவதை அறிவாரா என்பதையும்;
(ii) மேற்படி அலகை நிர்மாணிக்கும் ஒப்பந்த வேலையை மேற்கொண்டது யாரென்பதையும்;
(iii) மேற்படி ஒப்பந்தத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதை அறிவாரா என்பதையும்;
(iv) அவ்வாறாயின், அது பற்றிய விசாரணை மேற்கொள்ளப்பட்டதா என்பதையும்;
(v) மேற்படி விசாரணையின் தற்போதைய முன்னேற்றம் யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக | |
| : பத்மசிரி பண்டார | |
| : தேசிய மக்கள் சக்தி |