எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி அவர்களினால் கேட்கப்பட்ட வினா

Print

489/2025

கௌரவ (திருமதி) எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி,— கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2024 ஆம் ஆண்டு தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையால் இரத்தினக்கல் சுரங்க அகழ்வு மற்றும் பிரித்தெடுக்கும் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) மொனராகலை மாவட்டத்தில், வெள்ளவாய பிரதே​ச செயலாளர் பிரிவில் இரத்தினக்கல் சுரங்க அகழ்வு மற்றும் பிரித்தெடுக்கும் பணிகளுக்காக வழங்கப்பட்டுள்ள உரிமப் பத்திரங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) மேற்படி உரிமப் பத்திரங்கள், மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் விதப்புரைகளுக்கு அமைவாக வழங்கப்படுகின்றனவா என்பதையும்;

(iv) சுரங்க அகழ்வுப் பணிகளில் நிலவும் முறையற்ற தன்மை காரணமாக ஏற்படும் சுற்றாடல் பாதிப்பைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
: எம்.ஏ.சீ.எஸ். சத்துரி கங்கானி
: தேசிய மக்கள் சக்தி