483/2025
கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் பள்ளிவாசல்களில் இமாம் மற்றும் முஅத்தின் ஆகிய பதவிகள் உள்ளதென அறிவாரா என்பதையும்;
(ii) இதுவரையிலும் மேற்குறிப்பிட்ட பதவிகளில் சேவையாற்றும் பணியாளர் களுக்கு செலுத்த வேண்டிய ஆகக் குறைந்த சம்பளம் தொடர்பான எவ்விதக் குறிப்பும் இல்லையென்பதை அறிவாரா என்பதையும்;
(iii) ஆமெனில், இமாம் மற்றும் முஅத்தின் பதவிகளில் சேவையாற்றும் பணியார் களுக்கு செலுத்த வேண்டிய ஆகக் குறைந்த சம்பளம் தொடர்பாக தீர்மானம் ஒன்றை மேற்கொண்டு, சகல பள்ளிவாசல்களிலும் சம அளவான சம்பளம் செலுத்தப்பட வேண்டுமென்ற தீர்மானம் மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள் | |
| : எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் | |
| : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் |