எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

Print

482/2025

கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முஸ்லிம் சமய மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் அரபுக் கல்லூரிகள் பதிவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகின்றன என்பதையும்;

(ii) மௌலவிச் சான்றிதழை வழங்குவதற்காக மேற்படி ஒவ்வொரு அரபுக் கல்லூரிகளும் வெவ்வேறாக பரீட்சைகளை நடாத்துகின்றன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மௌலவிச் சான்றிதழை வழங்கும் பொருட்டு அரசாங்கத்தினால் பொதுப் பரீட்சையொன்றினை நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள்
: எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
: ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்