481/2025
கௌரவ (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்,— புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) முஸ்லிம் சமய மற்றும் பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள அரபுக் கல்லூரிகள் யாவை என்பதையும்;
(ii) மேற்படி அரபுக் கல்லூரிகளுக்கென பொதுப் பாடநெறியொன்று இல்லாததுடன், ஒவ்வோர் கல்லூரியிலும் வெவ்வேறு பாடநெறிகள் கற்பிக்கப்படுவதை அறிவாரா என்பதையும்;
(iii) மேற்படி அரபுக் கல்லூரிகளுக்கென பொதுப் பாடநெறியொன்றை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;
(iv) ஆமெனில், அதற்கான வேலைத்திட்டம் யாதென்பதையும்;
(v) மேற்குறிப்பிட்ட பொதுப் பாடநெறியை மற்றும் விரும்பிய வேறு ஏதேனும் பாடமொன்றை பயில்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் திகதி யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : புத்தசாசன. சமய மற்றும் கலாசார அலுவல்கள் | |
| : எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் | |
| : ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் |