இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அம்பிகா சாமிவெல் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

453/2025

கௌரவ (செல்வி) அம்பிகா சாமிவெல்,— பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) பல்வேறு இயற்கை மற்றும் சமூகப் பிரச்சினைகள் காரணமாக மலையக பெருந்தோட்டங்களில் வசிக்கின்ற மக்கள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும்;

(ii) பாதிக்கப்பட்டவர்களில் வீடுகளை இழந்த தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) இவர்கள் எவ்வளவு காலமாக தற்காலிக வீடுகளில் வசித்து வருகின்றனரென்பதையும்;

(iv) மேற்படி மக்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
: அம்பிகா சாமிவெல்
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom