இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரீ.கே. ஜயசுந்தர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

452/2025

கௌரவ ரீ.கே. ஜயசுந்தர,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கிங் கங்கை பெருக்கெடுப்பதன் காரணமாக காலி மாவட்ட மக்களின் வாழ்வியலுக்கும் உடமைகளுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

(ii) 2000 ஆம் ஆண்டின் பின்னர் கிங் கங்கையின் பெருக்கெடுப்பைக் கட்டுப்படுத்துவதற்கு அல்லது வேறு நோக்கத்தைச் செயல்படுத்துவதற்கான உத்தேச கருத்திட்டங்கள் தொடர்பாக அறிக்கைகள் தயாரிக்கப்பட்டுள்ளனவா என்பதையும்;

(iii) ஆமெனில், மேற்படி அறிக்கைகள் யாவை என்பதையும்;

(iv) மேற்படி அறிக்கைகளைத் தயாரித்த நிறுவனங்கள் யாவை என்பதையும்;

(v) மேற்படி கருத்திட்ட அறிக்கைகள் / சாத்தியவள ஆய்வறிக்கைகளைத் தயாரிப்பதற்காக செலவிடப்பட்டுள்ள தொகை யாது என்பதையும்;

(vi) அதற்கான நிதியைப் பெற்றுக்கொண்ட மூலங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கிங் கங்கையின் பெருக்கெடுப்பைக் கட்டுப்படுத்துவதற்காக கருத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனில், அவ் ஒவ்வொரு கருத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்ட ஆண்டு, முடிவுற்ற ஆண்டு, ஒதுக்கப்பட்ட தொகை, செலவிட்ட தொகை, செயற்படுத்திய நிறுவனம் மற்றும் பெறப்பட்ட தீர்வுகள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
: ரீ.கே. ஜயசுந்தர
: தேசிய மக்கள் சக்தி
2025-03-01 ஆம் திகதி 1 வாரங்கள் காலக்கெடு கேட்கப்பட்டுள்ளது
2025-05-09 ஆம் திகதி 2 வாரங்கள் காலக்கெடு கேட்கப்பட்டுள்ளது

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom