451/2025
கௌரவ பத்மசிறி பண்டார,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) அரசாங்க ஆசிரியர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகளைச் சாராத இடமாற்றங்கள், தேசிய ஆசிரிய இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக மேற்கொள்ளப்படுகின்றன என்பதை அறிவாரா;
(ii) கடந்த காலப்பகுதியில் தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையானது உரிய முறையில் இடம்பெறவில்லை என்பதை அறிவாரா;
(iii) ஆமெனில், இது தொடர்பில் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான நடவடிக்கைகள் யாவை;
(iv) கடந்த காலப்பகுதியில் அரச பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிக்கும் போது பாரிய அளவிலான ஊழல்கள், மோசடிகள் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளன என்பதை அறிவாரா;
(v) இவற்றைத் தவிர்ப்பதற்காக நடைமுறைப்படுத்தப்படும் நடைமுறை சாத்தியமான வேலைத்திட்டம் யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இலங்கை கல்வி நிர்வாக சேவை, இலங்கை கல்வியியலாளர் சேவை மற்றும் இலங்கை அதிபர் சேவையில் வெற்றிடங்கள் பெருமளவில் நிலவுகின்றன என்பதை அறிவாரா;
(ii) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு சேவையிலும் இன்றளவில் காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாது;
(iii) மேற்படி வெற்றிடங்களை நிரப்புவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை;
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி | |
| : பத்மசிரி பண்டார | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






