449/2025
கௌரவ பத்மசிரி பண்டார,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான மோதர மற்றும் மாளிகாவத்தையில் அமைந்துள்ள பிரதீபா மண்டபங்கள் அரசியல் ஆதரவாளர்களுக்கு 30 வருட காலத்திற்கு குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளனவா;
(ii) இவற்றை குத்தகை அடிப்படையில் வழங்குவதற்கு முன்னர் இவற்றின் மதிப்பீட்டுப் பெறுமதி அரசாங்கத்தின் பிரதம மதிப்பீட்டாளரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா;
(iii) ஆமெனில், மேற்படி ஒவ்வொரு பிரதீபா மண்டபத்தினதும் மதிப்பீட்டுப் பெறுமதி தனித்தனியாக யாது;
(iv) மேற்படி பிரதீபா மண்டபங்களை குத்தகைக்கு வழங்குகையில் முறையான பெறுகை செயன்முறையொன்று பின்பற்றப்பட்டுள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மத்தேகொட வீடமைப்புத் தொகுதியில் பௌத்த மையத்துக்கு அண்மித்தாக அமைந்துள்ள 116 பர்ச்சஸ் பரப்பளவிலான காணியில் ஒரு பர்ச்சஸ் தலா ரூ.5 இலட்சத்திற்கு வழங்கப்பட்டுள்ளதா:
(ii) மேற்படி காணித் துண்டுகள் யாருக்கு வழங்கப்பட்டுள்ளன;
(iii) இவை வீடுகளை நிர்மாணிக்கும் நோக்கத்துக்காக வழங்கப்பட்டுள்ளனவா;
(iv) இது தொடர்பில் அரசாங்கத்தின் பிரதம மதிப்பீட்டாளரிடமிருந்து மதிப்பீட்டுப் பெறுமதி பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு | |
| : பத்மசிரி பண்டார | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






