இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஒஷானி உமங்கா அவர்களினால் கேட்கப்பட்ட வினா

446/2025

கௌரவ (திருமதி) ஒஷானி உமங்கா,— கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் புதிய கைத்தொழில் பேட்டைகளை ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அத் திட்டங்கள் யாவை என்பதையும்;

(iii) கைத்தொழில் பேட்டைகளில் குத்தகை அடிப்படையில் கைத்தொழில்களை நிறுவுகையில், பல்வேறு நிறுவனங்களிடமிருந்து அங்கீகாரத்தை பெறுவதற்கு முதலீட்டாளர்களுக்கு நீண்ட காலம் காத்திருக்க வேண்டியுள்ளதென்பதை அறிவாரா என்பதையும்;

(iv) ஆமெனில், மேற்படி குத்தகை உடன்படிக்கைகளை தயாரிக்கும் செயற்பாடுகளில் காணப்படும் தேவையற்ற தாமதத்தை தடுப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(v) சம்பந்தப்பட்ட சகல நிறுவனங்களையும் இணைத்து இலகுவான செயன்முறையொன்றை தயாரிப்பதற்கான இயலுமை உள்ளதா என்பதையும்;

(vi) ஆமெனில், மேற்படி செயன்முறையை தயாரிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதையும்;

அவர் தொிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி
: ஒஷானி உமங்கா
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom