431/2025
கௌரவ தனுஷ்க ரங்கநாத்,— போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) களுத்துறை மாவட்டத்தில் 'ஐ-ரோட்' கருத்திட்டத்தின் கீழ் KL-2 கருத்திட்டம் (களுத்துறை பெகேஜ் 2) என்ற பெயரில் ஒரு கருத்திட்டம் இருந்ததென்பதையும்;
(ii) சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள் சட்ட நடவடிக்கை மேற்கொண்டதன் விளைவாக மேற்படி கருத்திட்டமானது இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(iii) இதன் காரணமாக அப்பிரதேச மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் அகலவத்தை மற்றும் மத்துகம தேர்தல் தொகுதிகளில் அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டிருந்த வீதிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி கருத்திட்டத்துடன் தொடர்புடைய ஒப்பந்த நிறுவனம்/நிறுவனங்கள் யாதென்பதையும்;
(iii) அந்த நிறுவனத்தின்/நிறுவனங்களின் உரிமையாளர்கள் யாவரென்பதையும்;
(iv) மேற்படி சட்ட நடவடிக்கைகளின் தற்போதைய நிலை யாதென்பதையும்;
(v) மேற்படி கருத்திட்டத்தை பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் | |
| : தனுஷ்க ரங்கனாத் | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






