429/2025
கௌரவ இம்ரான் மகரூப்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைப் கேட்பதற்கு,—
(அ) (i) திருகோணமலை மாவட்டத்தில், மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவு தாபிக்கப்பட்டு பல வருடங்கள் கடந்துள்ள போதிலும், இதுவரை தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவு தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாக நிறுவப்படவில்லை என்பதையும்;
(ii) கிண்ணியா பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தை தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாக நிறுவுவதற்கான பிரேரணையை உள்ளூராட்சி ஆணைக்குழு அங்கீகரித்துள்ளபோதிலும், இப்பிரேரணையானது இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) தோப்பூர் உப பிரதேச செயலகப் பிரிவை தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாகவும், கிண்ணியா பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தை தனியானதொரு பிரதேச செயலகப் பிரிவாகவும் நிறுவுவதில் காணப்படும் தடைகள் வெவ்வேறாக யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) திருகோணமலை மாவட்டத்தின் சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 1000 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற அதேவேளை சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் 100 குடும்பங்கள் மாத்திரமே வாழ்கின்றார்கள் என்பதை அறிவாரா;
(ii) ஆமெனில், இந்த சமநிலையற்ற நிலைமையை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி | |
| : இம்ரான் மகரூப் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






