இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சந்திம ஹெட்டிஆரச்சி அவர்களினால் கேட்கப்பட்ட வினா

422/2025

கௌரவ சந்திம ஹெட்டிஆரச்சி,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) களுத்துறை மாவட்டத்திலுள்ள, மாகாண சபைக்குச் சொந்தமான மருத்துவமனைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அந்த மாவட்டத்தில், மருத்துவமனை சேவை அல்லாத வேறு சுகாதார சேவைகளை வழங்கும் நிலையங்கள்/நிறுவனங்களை மாகாண சபை கொண்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அந்த நிலையங்கள்/நிறுவனங்கள் யாவையென்பதையும்;

(iv) களுத்துறை மாவட்டத்தில் காணப்படும் நிரல் அமைச்சுக்குச் சொந்தமான மருத்துவமனைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(v) அந்த மாவட்டத்தில், மருத்துவமனை சேவை அல்லாத வேறு சுகாதார சேவைகளை வழங்கும் நிலையங்கள்/நிறுவனங்களை நிரல் அமைச்சு கொண்டுள்ளதா என்பதையும்;

(vi) ஆமெனில், அந்த நிலையங்கள்/நிறுவனங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேலே (அ)(ii) மற்றும் (v)இல் குறிப்பிடப்பட்டுள்ள நிலையங்கள்/நிறுவனங்களில் தொற்றாத நோய்களுக்கான சிகிச்சை பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளனவா என்பதையும்;

(ii) ஆமெனில், அவற்றின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iii) அவை நிறுவப்பட்டுள்ள இடங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
: சந்திம ஹெட்டிஆரச்சி
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom