இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஞானமுத்து ஸ்ரீநேசன் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

420/2025

கௌரவ ஞானமுத்து ஸ்ரீநேசன்,— சுற்றாடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையிலுள்ள காடுகளின் அளவு ஏக்கர்களில் யாதென்பதையும்;

(ii) அவற்றுள் காட்டு யானைகள் வாழ்வதற்கு பொருத்தமான சூழலைக் கொண்ட காடுகளின் அளவு ஏக்கர்களில் யாதென்பதையும் ;

(iii) அக்காடுகளில் வாழும் காட்டு யானைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(iv) காட்டு யானைகள் மனிதர்களுக்கும், அவர்களுடைய உடைமைகளுக்கும் அழிவை ஏற்படுத்துகின்றன என்பதை அறிவாரா என்பதையும்;

(v) 2020 ஆம் ஆண்டு தொடக்கம் 2024 ஆம் ஆண்டு வரை காட்டு யானைகளால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, அத்தாக்குதல் காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் யானை-மனித மோதல் காரணமாக இறந்த காட்டு யானைகளின் எண்ணிக்கை என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) காடுகளின் அடர்த்தியை விடவும் அதிகமான காட்டு யானைகள் காடுகளில் வாழ்வதை அறிவாரா என்பதையும்;

(ii) காடுகளின் அடர்த்திக்கு ஏற்ப காட்டு யானைகளின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டியேற்பட்டுள்ளதா என்பதையும்;

(iii) ஆமெனில், அதற்கான பொறிமுறைகள் யாதென்பதையும்;

(iv) அது எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;

(v) ஆமெனில், காட்டு யானைகளால் ஏற்படும் அழிவுகளை கட்டுப்படுத்த ஏதேனுமொரு வழிமுறை உள்ளதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: சுற்றாடல்
: ஞானமுத்து ஸ்ரீநேசன்
: இலங்கை தமிழ் அரசு கட்சி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom