இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சாமர சம்பத் தசனாயக அவர்களினால் கேட்கப்பட்ட வினா

392/2025

கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஊவா மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய மாகாண இறைவரி ஆணையாளர் நியமிக்கப்பட்ட செயன்முறை யாதென்பதையும்;

(ii) மாகாண இறைவரி ஆணையாளர் பதவிக்கான தகைமைகள் யாவை என்பதையும்;

(iii) புதிய மாகாண இறைவரி ஆணையாளரை நியமிப்பதற்கு முன்னர் பணியாற்றிய மாகாண இறைவரி ஆணையாளர், உள்நாட்டு இறைவரி உத்தியோகத்தர் சேவையைச் சேர்ந்தவரா என்பதையும்;

(iv) மாகாண இறைவரி ஆணையாளர் உள்நாட்டு இறைவரி சேவையிலிருந்தா, மாகாண இறைவரி சேவையிலிருந்தா அல்லது கணக்காளர் சேவையிலிருந்தா நியமிக்கப்படுகின்றனர் என்பதையும்;

(v) ஊவா மாகாணத்துக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய மாகாண இறைவரி ஆணையாளர், இதற்கு முன்னர் ஊவா மாகாணத்தின் மாகாண இறைவரி ஆணையாளர் பதவிக்கு நியமிக்கப்பட்டு, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டவரா என்பதையும்;

(vi) ஆமெனில், மேற்படி உத்தியோகத்தர் நியமிக்கப்பட்டுள்ள அடிப்படை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
: சாமர சம்பத் தசனாயக

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom