இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சாமர சம்பத் தசனாயக அவர்களினால் கேட்கப்பட்ட வினா

389/2025

கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தலைவர் உள்ளடங்கலாக, தற்போதைய ஊவா மாகாண பகிரங்க சேவை ஆணைக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ள அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) தலைவர் உள்ளடங்கலாக அத்தகைய ஒவ்வோர் அங்கத்தவரினதும் பெயர், இதற்கு முன்னர் பணியாற்றிய நிறுவனம், வகித்த பதவி மற்றும் நிறைவேற்றிய சமூகப் பணிப்பொறுப்பு என்பன வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) தலைவருக்கும் மற்றைய அங்கத்தவர்களுக்கும் செலுத்தப்படும் கொடுப்பனவுகள் வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) இதற்கு முன்னர் இயங்கிய ஆணைக்குழுவுக்கு நியமிக்கப்பட்டிருந்த அங்கத்தவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
: சாமர சம்பத் தசனாயக

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom