385/2025
கௌரவ வருண லியனகே,— நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேச செயலகப் பிரிவுகளில் கடுமையான குடிநீர்ப் பற்றாக்குறை நிலவுகிறது என்பதையும்;
(ii) இதன் காரணமாக அந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் கடும் சிரமங்களையும் சுகாதார சீர்கேடுகளையும் எதிர்கொண்டுள்ளனர் என்பதையும்;
(iii) முறையான நீர் வழங்கலுக்கான வழிமுறைகள் இன்மையால் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகரித்துள்ளது என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) இந்த நீர்ப் பற்றாக்குறைக்குத் தீர்வாக நடைமுறைப்படுத்தப்பட்ட "விசல் இரத்தினபுரி நீர் வழங்கல் திட்டத்தின்" 2ஆம் கட்டப் பணிகள் எந்தளவில் நிறைவுசெய்யப்பட்டுள்ளன என்பதையும்;
(ii) இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவுசெய்யப்பட்டதன் பின்னர், அதற்குள் அடங்காத பகுதிகளுக்கு நீர் வசதிகளை வழங்குவதற்கு புதிய நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
(iii) இரத்தினபுரி மாவட்டத்தில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற சமுதாய நீர் வழங்கல் திட்டங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) புதிய சமுதாய நீர் வழங்கல் திட்டங்களை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு | |
| : வருண லியனகே | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






