384/2025
கௌரவ வருண லியனகே,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2017 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை பல்வேறு இயற்கை அனர்த்தங்களால் ஏற்பட்ட உயிர்ச் சேதம், அழிவடைந்த சொத்துக்கள் மற்றும் தொழில்முயற்சிகளுக்காக செலுத்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை மற்றும் செலுத்த வேண்டியுள்ள இழப்பீட்டு நிலுவை ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) தேசிய காப்புறுதி நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட காப்புறுதி திட்டமானது, 03/2016 ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் தாபிக்கப்பட்டுள்ளதுடன், அது அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) இலக்கம் 01/2020 கொண்ட சுற்றறிக்கையின் மூலம் ரூ. 10,000/= இலும் கூடிய இழப்பீட்டுத் தொகையைப் பெற காணி உரிமையை அத்தாட்சிப்படுத்த வேண்டுமென பணிக்கப்பட்டுள்ளதால் பெரும் எண்ணிக்கையான குடும்பங்களுக்கு இழப்பீடு கிடைக்காததை அறிவாரா என்பதையும்;
(iv) அனர்த்தங்களால் பாதிக்கப்படுகின்ற குடும்பம் ஒன்றுக்குத் தேவையான உலர் மற்றும் சமைத்த உணவுகளை வழங்க, நாளொன்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகை போதாததை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(v) அனர்த்த இழப்பீட்டு மதிப்பீடு நிமித்தம், 2020.09.09ஆம் திகதிய, NBRO/FL/DA/IN/R5 ஆம் இலக்க சுற்றறிக்கையின் மூலம் நிர்ணயிக்கப்பட்டுள்ள மதிப்பீட்டுப் பெறுமதி போதுமானதாக இல்லை என்பதால், மதிப்பீட்டுப் பெறுமதியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






