இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரோஹித அபேகுணவர்தன அவர்களினால் கேட்கப்பட்ட வினா

382/2025

கௌரவ ரோஹித்த அபேகுணவர்தன,— கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இன்றளவில் பணிபுரிகின்ற சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களின் எண்ணிக்கை மற்றும் அந்தப் பதவியில் தற்போது காணப்படும் வெற்றிடங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) அத்தகைய வெற்றிடங்களுக்கு புதிய அலுவலர்கள் நியமிக்கப்படுவார்களா என்பதையும்;

(iii) இன்றளவில் பணிபுரிகின்ற சமுர்த்தி முகாமையாளர்களின் எண்ணிக்கை மற்றும் பதில் கடமை புரிகின்ற சமுர்த்தி முகாமையாளர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iv) தற்போது ஓய்வு பெற்றுள்ள சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களினதும் சமுர்த்தி முகாமையாளர்களினதும் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(v) இவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களினதும் சமுர்த்தி முகாமையாளர்களினதும் பணிப்பொறுப்பு சமமானதா என்பதையும்;

(ii) சமுர்த்தி அபிவிருத்தி அலுவலர்களுக்கும் சமுர்த்தி முகாமையாளர்களுக்கும் பதவி உயர்வு வழங்குவதற்கான வழிமுறை காணப்படுகிறதா என்பதையும்;

(iii) ஆமெனில், அவ்வழிமுறை வெவ்வேறாக யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) (i) இதுவரை தாபிக்கப்பட்டுள்ள சமுர்த்தி வங்கிகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்;

(ii) சமுர்த்தி இயக்கம் தொடர்பில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவையென்பதையும்;

என்பதை அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

: கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை
: ரோஹித அபேகுணவர்தன

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom