381/2025
கௌரவ ரோஹித்த அபேகுணவர்தன,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையிலுள்ள தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணத்திற்கமைவாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(ii) அத்தகைய ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வி சாரா பணியாட்டொகுதி ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(iii) இலங்கையிலுள்ள மாகாண சபை பாடசாலைகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மாகாணத்திற்கமைவாக வெவ்வேறாக யாதென்பதையும்;
(iv) அத்தகைய ஒவ்வொரு பாடசாலையிலும் கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வி சாரா பணியாட்டொகுதி ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;
(v) கடந்த அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளாக மாற்றப்பட்டுள்ள மாகாண சபை பாடசாலைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(vi) அத்தகைய பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி | |
| : ரோஹித அபேகுணவர்தன |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






