இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரோஹித அபேகுணவர்தன அவர்களினால் கேட்கப்பட்ட வினா

379/2025

கௌரவ ரோஹித அபேகுணவர்தன,— நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையிலுள்ள சிறைச்சாலைகளில் பணியாற்றும் அலுவலர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு சிறைச்சாலை வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) அத்தகைய சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளில் தற்போது காணப்படுகின்ற குறைபாடுகள் யாவையென்பதையும்;

(iii) சிறைச்சாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை விருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்படும் நபர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள புனர்வாழ்வளிப்பு நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

(ii) அத்தகைய புனர்வாழ்வளிப்பு நிலையங்களில் தற்போது புனர்வாழ்வளிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நிலையம் வாரியாக வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) இவர்களுக்கு புனர்வாழ்வளிக்கும்போது பின்பற்றப்படும் வழிமுறைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு
: ரோஹித அபேகுணவர்தன

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom