இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

365/2024

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். நிசாம் காரியப்பர்,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2021 ஆம் ஆண்டு, மே மாதம் பாதுகாப்பு அமைச்சின் அப்போதைய செயலாளரின் வழிகாட்டுதலின் கீழ், பாதுகாப்பு அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்டவை தவிர்ந்த ஏனைய இஸ்லாமிய மத நூல்களை இலங்கைக்கு இறக்குமதி செய்வதைக் கட்டுப்படுத்தித் தடை விதிக்கப்பட்டது என்பதையும்;

(ii) கடந்த வருடத்திலும் கூட, இத்தடை காரணமாகப் புனித குர்ஆனின் இறக்குமதி செய்யப்பட்ட பிரதிகளை விடுவிப்பதில் பல மாத கால தாமதம் ஏற்பட்டது என்பதையும்;

(iii) இஸ்லாமிய மதப் புத்தகங்களை விடுவிப்பதில் ஏற்பட்ட நீண்ட தாமதத்தின் மூலம் பாரபட்சமிகு இத்தடையானது இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வோருக்குக் கடுமையான சிரமங்களை ஏற்படுத்தியது என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) மேற்குறிப்பிட்ட தடையினை/கட்டுப்பாடுகளை அகற்றுவதற்கு/நீக்குவதற்கு அரசாங்கம் உடனடி நடவடிக்கைகளை எடுக்கின்றதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom