327/2024
கௌரவ அசித நிரோஷண எகொட வித்தான,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) காணி மறுசீரமைப்பு ஆணைக்குழு வசமிருந்த கடுவலை, கொத்தலாவல கிராம அலுவலகர் பிரிவில் 'பட்டுத் தொழிற்சாலை' அமைந்திருந்த காணியிலிருந்து வ/ப தர்மாயதன பாதுகாப்புச் சபைக்கும் ஏனைய தரப்பினருக்கும் காணித் துண்டுகள் விடுவிக்கப்பட்டுள்ளனவா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) விடுவிக்கப்பட்டுள்ள காணித் துண்டுகள் தவிர்ந்த எஞ்சியுள்ள காணியிலிருந்து குடியிருப்புகளை அமைப்பதற்காக கையுதிர்க்கப்பட்ட காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) வீதிகள் மற்றும் ஒதுக்குப் பிரதேசங்கள் நிமித்தம் ஒதுக்கப்பட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) பொதுப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள காணித் துண்டுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அத்தகைய ஒவ்வொரு காணித் துண்டினதும் விஸ்தீரணமானது, நில அளவீட்டு அலகுகளுக்கு ஏற்ப தனித்தனியாக யாதென்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) மேலே (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள காணிகள் கையுதிர்க்கப்பட்ட அடிப்படை மற்றும் காலகட்டம் யாதென்பதையும்;
(ii) அச்சந்தர்ப்பத்தில் பர்ச் ஒன்றின் பெறுமதியும் தற்போதைய பர்ச் ஒன்றின் பெறுமதியும் தனித்தனியே யாதென்பதையும்;
(iii) மேலே (ஆ)(ii)இல் குறிப்பிடப்பட்டுள்ள காணித் துண்டுகள் அடையாளமிடப் பட்டுள்ள காணி வரைபடத்தை சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iv) பொதுப் பணிகளுக்கான காணித் துண்டுகள் இன்றளவில் எத்தகைய நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்பதையும்;
அவர் மேலும் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
| : கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன | |
| : அசித நிரோஷண எகொட வித்தான | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






