இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி அவர்களினால் கேட்கப்பட்ட வினா

323/2024

கௌரவ (திருமதி) சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கைப் பொலிஸில், பொலிஸ் குதிரைப்படைப் பிரிவொன்று உள்ளதா;

(ii) ஆமெனில், தற்பொழுது அப்பிரிவிலுள்ள குதிரைகளின் எண்ணிக்கை எத்தனை;

(iii) மேற்படி எண்ணிக்கையானது வயதுப் பிரிவுகளின் அடிப்படையில் வெவ்வேறாக யாது;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) பொலிஸ் குதிரைப்படைப் பிரிவிற்கு 15 இனவிருத்திக்குரிய ஆண் குதிரைகளை இறக்குமதி செய்வதற்காக LA/SJ/300/2024 என்ற இலக்கத்தின் கீழ் விலைமனு கோரப்பட்டுள்ளதா;

(ii) ஆமெனில், அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட விலைமனுக்களின் எண்ணிக்கை எத்தனை;

(iii) மேற்குறித்த குதிரைகளை இறக்குமதி செய்வதற்காக தெரிவு செய்யப்பட்ட வழங்குநர் யார்;

(iv) மேற்குறிப்பிடப்பட்ட விலைமனுவிற்கமைய மேற்குறித்த 15 குதிரைகளை இறக்குமதி செய்வதற்காக செலவு செய்யப்படும் பணத்தொகை எவ்வளவு;

என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
: சட்டத்தரணி நிலந்தி கொட்டஹச்சி
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom