இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அஜித் கிஹான் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

321/2024

கௌரவ அஜித் கிஹான்,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கடந்த காலத்தில், வரையறுக்கப்பட்ட சிலாபம் பெருந்தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான காணிகளில் மணல் அகழப்பட்டு விற்பனை செய்யப்பட்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;

(ii) ஆமெனில், மணல் விற்பனையின் நோக்கங்கள் யாவையென்பதையும்;

(iii) சுற்றாடல் ரீதியாக பாதகமான இச்செயற்பாடு தொடர்பில் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) மேற்படி கம்பனியின் தென்னந்தோட்டங்களிலிருந்து ஈட்டப்டுகின்ற வருடாந்த வருமானம் எவ்வளவு என்பதையும்;

(ii) மேற்படி கம்பனிக்குச் சொந்தமான தென்னந்தோட்டங்களை இந்தியாவின் அமுல் கம்பனிக்கு வழங்குவதற்கு கடந்த அரசாங்கங்களால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததை அறிவாரா என்பதையும்;

(iii) அதன் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;

(iv) மேற்படி கம்பனியின் தென்னந்தோட்டங்களில் விளைச்சல் குறைவடைவதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;

(v) மேற்படி தென்னந்தோட்டங்களின் விளைச்சலை அதிகரிப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
: அஜித் கிஹான்
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom