இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

320/2024

கௌரவ கவீந்திரன் கோடீஸ்வரன்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) கல்முனை வடக்குப் பிரதேச செயலகப் பிரிவானது, 1989 இல் உப மாவட்ட செயலகப் பிரிவாக தாபிக்கப்பட்டதன் பின்னர் 1993.03.17ஆம் திகதிய 93/600/034 ஆம் இலக்க மற்றும் 1993.03.31 ஆம் திகதிய 93/600/034(I) ஆம் இலக்க அமைச்சரவை நிருபங்கள் மற்றும் 1993.07.09 ஆம் திகதிய அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 1993.09.28 ஆம் திகதிய அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் ஒரு பிரதேச செயலகமாகத் தரமுயர்த்தப்பட்டது ௭ன்பதையும்;

(ii) அதற்கமைய, 34 வருடங்களுக்கும் மேலாக அது ஒரு சுயாதீனமான பிரதேச செயலகமாக இயங்கி வருகின்றதென்பதையும்;

(iii) கல்முனை - வடக்கு (தமிழ்ப் பிரிவு) பிரதேச செயலகத்தை, கல்முனை -தெற்கு பிரதேச செயலகத்தின் ஓர் உப அலுவலகமாகத் தரமிறக்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதையும்;

அவர் அறிவாரா?

(ஆ) (i) மேலே (அ)(iii) இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தரமிறக்குவதற்கு அமைச்சரவை தீர்மானமொன்றை மேற்கொண்டுள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், மேற்படி அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுமா என்பதையும்;

(iii) இன்றேல், இத்தகைய தரமிறக்கத்தின் அடிப்படை யாதென்பதையும்;

(iv) அமைச்சரவைத் தீர்மானத்தை விஞ்சி, பிரதேச செயலகமொன்றை, உப பிரதேச செயலகமொன்றாகத் தரமிறக்குவதற்கு ஓர் அமைச்சின் செயலாளருக்கு / அரச அலுவலரொருவருக்கு இயலுமையுள்ளதா என்பதையும்;

(v) ஆமெனில், அதன் சட்டபூர்வத்தன்மை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி
: கவீந்திரன் கோடீஸ்வரன்
: இலங்கை தமிழ் அரசு கட்சி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom