319/2024
கௌரவ இம்ரான் மகரூப்,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2023.01.01 திகதி தொடக்கம் 2024.12.20 திகதி வரையான காலப்பகுதியில் கிண்ணியா மின் பாவனையாளர் சேவை நிலைய ஆளுகைப் பிரதேசத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட மணித்தியாலங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பிரதேசத்திற்கமைவாக வெவேறாக யாதென்பதையும்;
(ii) மேற்படி மின் துண்டிப்புக் காரணமாக இணையத்தளம் ஊடாகக் கல்வி கற்கும் மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் உள்ளிட்ட அப்பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டமையை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) தொடர்ச்சியாக இவ்வாளுகைப் பிரதேசத்தில் மின் விநியோகம் துண்டிக்கப்படுகிறது என்பதை அவர் அறிவாரா என்பதையும்;
(iv) ஆமெனில், அதற்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(v) அதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அச்சிடப்பட்ட மின்கட்டணப் பட்டியலுக்குப் பதிலாக குறுஞ்செய்தி ஊடாக மாதாந்த மின்கட்டணப் பட்டியலை வழங்கும் முறையொன்று நடைமுறையில் உள்ளதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(ii) அதன் காரணமாக சூட்டிகை (ஸ்மார்ட்) கைத்தொலைபேசிகளை கொண்டிராதோர் மாத்திரமன்றி வயோதிப மின் பாவனையாளர்களும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர் என்பதை அவர் ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அதற்குப் பதிலாக முன்னர் போன்றே அச்சிடப்பட்ட கட்டணப் பட்டியலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : வலுசக்தி | |
| : இம்ரான் மகரூப் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






