302/2024
கௌரவ ரவி கருணாநாயக்க,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வருடாந்தம் அரசாங்க மற்றும் தனியார் பாடசாலைகளில் முதலாம் வகுப்பிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேலே குறிப்பிடப்பட்ட (i) இக்கு அமைவாக கடந்த ஐந்து ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) கடந்த மூன்று ஆண்டுகளில் க.பொ.த (சா/த) மற்றும் க.பொ.த (உ/த) பரீட்சைகளுக்குத் தோற்றிய மற்றும் சித்தியடைந்த பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) மேலே குறிப்பிடப்பட்ட க.பொ.த (உ/த) பரீட்சார்த்திகளில் சித்தியடைந்து அரசாங்கப் பல்கலைக்கழகங்களுக்கு தகுதிபெற்று அனுமதி கிடைக்கப்பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு வெவ்வேறாக அறிவிப்பாரா?
(ஆ) (i) பல்கலைக்கழக அனுமதிக்காக தகுதிபெற்றிருந்தும் பல்கலைக்கழகங்களுக்குள் அனுமதி கிடைக்கப்பெறாத மாணவர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் யாதென்பதையும்;
(ii) இலங்கையிலுள்ள தனியார் பல்கலைக்கழகங்களில் பதிவுசெய்துகொண்ட அத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) உயர் கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையுடன், கடந்த ஐந்து வருடங்களில் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் கல்விகற்கும் மாணவர்களுக்காக மதிப்பிடப்பட்ட வருடாந்தச் செலவினை இலங்கை ரூபா மற்றும் ஐக்கிய அமெரிக்க டொலர்களில் யாதென்பதை வெவ்வேறாகவும்;
(iv) கடந்த ஐந்து வருடங்களில் கல்விக்கான மொத்த ஒதுக்கீட்டுத் தொகை மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் சதவீதம் யாதென்பதை வெவ்வேறாகவும்;
அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி | |
| : ரவி கருணாநாயக்க |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






