297/2024
கௌரவ சாமர சம்பத் தசநாயக்க,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் வைத்தியர் திரு. அனில் ஜாசிங்கவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(ii) அவர் தொடர்பாக அரசாங்க கணக்காய்வாளர் தலைமை அதிபதியினால் கணக்காய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதா;
(iii) திரு. ஜாசிங்க சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படும் தருணத்தில் மேற்குறிப்பிடப்பட்ட கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் விசாரணை நிறைவடைந்திருந்ததா;
(iv) மேற்படி விசாரணையில் திரு. ஜாசிங்க நிரபராதியாக காணப்பட்டுள்ளாரா;
(v) திரு. ஜாசிங்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுகையில் ரூ. 29 இலட்சம் தொடர்பாக கணக்காய்வு விசாரணைக்கு உட்படுத்தப் பட்டுள்ளார் என்பதை ஏற்றுக்கொள்வாரா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
| : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக | |
| : சாமர சம்பத் தசனாயக |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






