292/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இலங்கையில் பெய்த கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக புத்தளம் ஆதார வைத்தியசாலையின் நோயாளர் தங்கும் விடுதிகள், வெளிநோயாளர் பிரிவுகள், சிகிச்சைப் பிரிவுகள் உள்ளிட்ட வைத்தியசாலை வளாகம் வெள்ளத்தால் மூழ்கியதென்பதையும்;
(ii) மேற்படி வைத்தியசாலையில் கழிவு நீரை வெளியேற்றவும், மழைநீர் வழிந்தோடவும் வடிகான் தொகுதி இல்லையென்பதையும்;
(iii) நோயாளர்களுக்குச் சிகிச்சை வழங்கும் வைத்தியசாலை வளாகங்கள் மிகவும் பாதுகாப்பாக பராமரிக்கப்படல் வேண்டுமென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) ஆமெனில், மேற்படி வைத்தியசாலை வளாகத்தை மிகவும் பாதுகாப்பாக பராமரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக | |
| : சட்டத்தரணி ரஊப் ஹகீம் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






