291/2024
கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) "கொவிட் – 19" பெருந்தொற்றினால் பீடிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு பொருத்தமான இடமாக அடையாளம் காணப்பட்ட மட்டக்களப்பு "மஜ்மா நகர்" மயானமானது இடுகாடுகள், சுடுகாடுகள் கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் உரித்தாகும் உள்ளூராட்சி நிறுவனம் யாது;
(ii) மேற்குறிப்பிட்ட மயானத்தின் பரப்பளவு யாது;
(iii) மேற்குறிப்பிட்ட காணி அரசாங்கத்துக்கு உரித்தானதா;
(iv) ஆமெனில், மேற்படி காணி சட்டரீதியாக சுவீகரிக்கப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை சமர்ப்பிப்பாரா?
(v) மேற்படி சுவீகரிப்புக்கான நட்ட ஈடு செலுத்தப்பட்டுள்ளதா;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) மேற்படி மயானத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ள நிதித்தொகை மற்றும் தனிப்பட்ட தரப்பினர்களிடமிருந்து நன்கொடையாகக் கிடைக்கப்பெற்றுள்ள நிதித்தொகை வெவ்வேறாக யாது;
(ii) மேற்படி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக தனியார் தரப்பினரால் வழங்கப் பட்டுள்ள இயந்திரசாதனங்கள் உள்ளிட்ட ஏனைய சொத்துக்கள் யாவை?
என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி | |
| : சட்டத்தரணி ரஊப் ஹகீம் | |
| : ஐக்கிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






