இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

290/2024

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) அரசாங்கத்தின் கொள்கை ரீதியான தீர்மானத்திற்கு அமைவாக, "கோவிட் -19" பெருந்தொற்றினால் இறந்தவர்களின் சடலங்கள் மட்டக்களப்பு "மஜ்மா நகர்" பிரதேசத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதுடன், அதற்காக முப்படையினரின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பு பெற்றுக்கொள்ளப்பட்டதை அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி நல்லடக்கப் பணிகளுக்காக சேவை இணைப்புச் செய்யப்பட்டிருந்த ஒவ்வொரு படைப்பிரிவினதும் பதவிநிலை அலுவலர்கள் மற்றும் ஏனைய அலுவலர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(iii) அவ்வலுவலர்களுக்கு அடிப்படைச் சம்பளத்திற்கு மேலதிகமாக செலுத்தப்பட்ட கொடுப்பனவு எவ்வளவு என்பதையும்;

(iv) மேற்படி நல்லடக்கப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்ட முப்படையினரின் வாகனங்கள் மற்றும் வாடகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

(v) அவ்வொவ்வொரு வாகனத்திற்காகவும் மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் செலவு வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

(vi) மேற்படி நல்லடக்கப் பணிகளுக்காக இறந்தவர்களின் உறவினர்களிடமிருந்து பணம் அறவிடப்பட்டதா என்பதையும்;

(vii) ஆமெனில், அவ்வாறு அறவிடப்பட்ட பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom