இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

283/2024

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் நிலவும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள மண்சரிவு ஆபத்துள்ள பிரதேசங்கள்/இடங்கள் யாவையென்பதையும்;

(ii) மேற்படி பிரதேசங்கள்/இடங்களில் குடியிருப்புகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் அமைந்துள்ள இடங்கள் யாவையென்பதையும்;

(iii) தற்போது மக்கள் வசிக்கும் ஆபத்தான குடியிருப்புகள் மற்றும் அசையா சொத்துக்கள் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு மற்றும் கிராம அலுவலர் பிரிவு வாரியாக வெவ்வேறாக யாவையென்பதையும்;

(iv) மேற்படி குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்காக முன்வைக்கப்பட்டுள்ள மாற்றுத் திட்டங்கள் யாவையென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom