இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நிஷாந்த சமரவீர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

257/2024

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காலி மாவட்டத்தின் 'ஹோலுவகொட' அபிவிருத்திக் கருத்திட்டத்தின் தற்போதைய நிலைமை யாது;

(ii) மேற்படி கருத்திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களின் பரப்பளவு எவ்வளவு;

(iii) மேற்படி நிலங்களை விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவதில் இன்றளவில் காணப்படுகின்ற தடைகள் யாவை;

(iv) மேற்படி கருத்திட்டத்திற்காக இதுவரையில் செலவிடப்பட்டுள்ள தொகையுடன் ஒப்பிடுகையில், இக்கருத்திட்டத்திலிருந்து எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள் கிடைக்கப்பெற்றுள்ளனவா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள்
: நிஷாந்த சமரவீர
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom