இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நிஷாந்த சமரவீர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

255/2024

கௌரவ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) காலி மாவட்டத்தில் நுகதூவ, "வலஹன்தூவ வத்தை" காணியை துண்டாக்கி பல்வேறு கருத்திட்டங்களுக்காக வழங்குவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததை அறிவாரா என்பதையும்;

(ii) மேற்படி கருத்திட்டங்களின் தற்போதைய நிலைமை யாதென்பதையும்;

(iii) மேற்படி கருத்திட்டங்களுக்காக இதுவரையில் செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும்;

(iv) ஒவ்வொரு கருத்திட்டத்திற்குமான தேவை மற்றும் எதிர்ப்பார்க்கப்படும் நன்மைகள் இனங்காணப்பட்டுள்ளனவா என்பதையும்;

(v) அதன்படி, அத்தியாவசியமான கருத்திட்டங்கள் யாவை என்பதையும்;

(vi) அவற்றுள் சில கருத்திட்டங்கள் இன்றளவில் இடைநடுவில் நிறுத்தப் பட்டிருப்பின், அவற்றை மீள ஆரம்பிக்க முடியுமா என்பதையும்;

(vii) இன்றேல், மேற்படி கருத்திட்டங்களால் ஏற்க நேரிடும் நட்டம் எவ்வளவு என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன
: நிஷாந்த சமரவீர
: தேசிய மக்கள் சக்தி
2025-02-05 ஆம் திகதி 1 வாரங்கள் காலக்கெடு கேட்கப்பட்டுள்ளது

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom