254/2024
கௌரவ ரவீந்திர பண்டார,— பிரதம அமைச்சர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட கல்வி மறுசீரமைப்பு முன்மொழிவுகள் நடைமுறைப்படுத்தப்படுமா என்பதையும்;
(ii) அவற்றில் முன்மொழியப்பட்டவாறு அழகியல், தகவல் தொழில்நுட்பம் மற்றும் கணக்கியல் ஆகிய பாடங்கள் நீக்கப்படுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iii) இன்றளவில் இலங்கையில் நடைமுறையிலுள்ள கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றீர்களா என்பதையும்;
(iv) புதிய கல்வி முன்மொழிவுகளால் மாணவர்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களை குறைக்கும் முறை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) அனைத்து அரச பாடசாலைகளுக்கும் சமமாக வளங்களை பகிர்ந்தளிப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் யாவையென்பதையும்;
(ii) கல்வித் துறையில் நிலவும் கடும் போட்டித்தன்மையைக் குறைப்பதற்காக வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் யாவையென்பதையும்;
(iii) பல்கலைக்கழக கல்விசார் வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக வகுக்கப்படும் திட்டங்கள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி | |
| : ரவீந்திர பண்டார | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






