இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அஜித் கிஹான் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

251/2024

கௌரவ அஜித் கிஹான்,— பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2019 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதிவாதிகளை இதுவரையில் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு முடியாது போயுள்ளதென்பதையும்;

(ii) மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரி உட்பட பிரதிவாதிகளை மிக விரைவில் சட்டத்தின் முன் கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என காதினல் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க திருச்சபை மற்றும் ஏனைய சமயத் தலைவர்கள் எதிர்ப்பார்க்கின்றனர் என்பதையும்;

அவர் ஏற்றுக்கொள்வாரா?

(ஆ) ஆமெனில், மேற்படி தாக்குதலுடன் தொடர்புடைய பிரதிவாதிகளை சட்டத்தின் முன் கொண்டு வருதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு, மேற்படி தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள்
: அஜித் கிஹான்
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom