இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சட்டத்தரணி ரஊப் ஹகீம் அவர்களினால் கேட்கப்பட்ட வினா

250/2024

கௌரவ சட்டத்தரணி ரஊப் ஹகீம்,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் இலங்கையில் கோவிட்-19 நோயுடன் தொடர்புடையதாக —

(i) ஆய்வுகூடத்தினால்-உறுதி செய்யப்பட்ட நோயாளர்களின் மொத்த எண்ணிக்கை;

(ii) உறுதி செய்யப்பட்ட மரணங்களின் மொத்த எண்ணிக்கை;

(iii) மரணித்தவர்களின் வயது, பால், வதிவிட மாகாணம் மற்றும் மாவட்டம், இனம் மற்றும் சமயம் அடிப்படையிலான மரணங்களின் எண்ணிக்கை விபரங்கள்;

ஆகியவற்றை அவர் இச்சபைக்கு வெவ்வேறாக தெரிவிப்பாரா?

(ஆ) 2019 முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியினுள் இலங்கையில் கோவிட்-19 மரணங்களுடன் தொடர்புடையதாக —

(i) சடலங்களை அகற்றுவதற்கு பயன்படுத்தப்பட்ட முறை/கள்;

(ii) தகனக்கிரியை மேற்கொள்ளப்பட்ட சடலங்களின் மொத்த எண்ணிக்கை;

(iii) அடக்கம் செய்யப்பட்ட சடலங்களின் மொத்த எண்ணிக்கை;

(iv) தகனக்கிரியை மற்றும் அடக்கம் செய்யப்பட்டவர்களின் வயது, பால், வதிவிட மாகாணம் மற்றும் மாவட்டம், இனம் மற்றும் சமயம் அடிப்படையிலான விபரங்கள்;

ஆகியவற்றை அவர் இச்சபைக்கு வெவ்வேறாக தெரிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
: சட்டத்தரணி ரஊப் ஹகீம்
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom