இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நிஷாந்த சமரவீர அவர்களினால் கேட்கப்பட்ட வினா

241/2024

கௌரவ​ (டாக்டர்) நிஷாந்த சமரவீர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) "குடும்ப மருத்துவம்" (Family Medicine) எனும் பெயரில் நிபுணத்துவ பயிற்சித் துறையொன்றைத் தாபிப்பதன் மூலம் எதிர்பார்க்கப்படுவது யாதென்பதையும்;

(ii) இன்றளவில் மேற்படி எதிர்ப்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையில், அதாவது பொது மக்களுக்கும் ஆரம்ப நிலை மருத்துவச் சேவைக்கும் அண்மித்து செயலாற்றும் வகையில், குறித்த நிபுணத்து​​​வ மருத்துவர்கள் சேவை இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;

(iii) இன்றேல், சிற்சில தனிப்பட்ட தேவைகளின் நிமித்தம் நகர்புறங்களை அண்மித்த மருத்துவமனைகளுக்கு சேவை இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்களா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக
: நிஷாந்த சமரவீர
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom