236/2024
கௌரவ சட்டத்தரணி (செல்வி) லக்மாலி ஹேமச்சந்திர,— சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மருத்துவ வழங்கல் செயற்பாடுகளுடன் தொடர்புடைய தரப்புகளுக்கிடையே ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் உரிய முறையில் தரவுத்தளம் பராமரிக்கப்படாமை காரணமாக மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு மருந்துகளின் விலையும் அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளதென்பதையும்;
(ii) அந்த நிலைமை ஒட்டுமொத்த சுகாதாரக் கட்டமைப்பின் இருப்புக்கு சவாலாக மாறியுள்ளதென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) அரச சுகாதாரக் கட்டமைப்பின் மருந்துக் கையிருப்பு முகாமைத்துவம் தொடர்பாக கணினி மென்பொருள் கட்டமைப்பொன்று காணப்படுகின்றதா என்பதையும்;
(ii) ஆமெனில், அது யாதென்பதையும்;
(iii) அக்கட்டமைப்பு தொடர்ந்து இற்றைப்படுத்தப்படுகின்றதா என்பதையும்;
(iv) மருந்துக் கொள்வனவுச் செயற்பாடு மற்றும் கையிருப்புகளை விநியோகிக்கும் செயற்பாடு அன்றாடம் மேற்பார்வை செய்யப்படுகின்றதா என்பதையும்;
(v) அதற்கான பொறுப்பை வகிக்கின்றவர்கள் யாவரென்பதையும்;
(vi) மேற்படி ஒட்டுமொத்தச் செயற்பாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ள முறைகேடுகளும் குறைபாடுகளும் யாவை என்பதையும்;
(vii) அவற்றை தடுத்து நிறுத்துவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
| : சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக | |
| : சட்டத்தரணி லக்மாலி ஹேமசந்திர | |
| : தேசிய மக்கள் சக்தி |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






