இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

நலீன் பண்டார ஜயமஹ அவர்களினால் கேட்கப்பட்ட வினா

190/2024

கௌரவ நலின் பண்டார ஜயமஹ,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) மின் கட்டணத்தைத் திருத்துவதாக அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் அறிவித்தமை பற்றி அவர் அறிவாரா என்பதையும்;

(ii) இறுதியாக மின் கட்டணம் திருத்தப்பட்ட திகதி யாதென்பதையும்;

(iii) எதிர்காலத்தில் மின் கட்டணம் திருத்தப்படுமாயின், அது தொடர்பிலான விபரங்கள் யாவை என்பதையும்;

(iv) மின் கட்டணத்தை திருத்துவதற்கான முன்மொழிவுகளை சமர்ப்பிப்பதற்கு இலங்கை மின்சார சபை நீண்ட காலத்தை எடுத்துக்கொள்வதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் தெரிவிக்கப்படுகின்ற கூற்று தொடர்பில் எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

(v) மின் கட்டணத்தை மேலும் திருத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

: வலுசக்தி
: நலீன் பண்டார ஜயமஹ
: ஐக்கிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom