இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரவீந்திர பண்டார அவர்களினால் கேட்கப்பட்ட வினா

182/2024

கௌரவ ரவீந்திர பண்டார,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரை தேசிய மின் கட்டமைப்பிற்கு புதிதாக சேர்க்கப்பட்டுள்ள மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் பெயர்கள் யாவை என்பதையும்;

(ii) மேற்படி ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்திலிருந்தும் பிறப்பாக்கம் செய்வதற்கு எதிர்ப்பார்க்கப்படும் மின்சார கொள்ளளவு மற்றும் தற்போது பிறப்பாக்கம் செய்யப்படும் மின்சார கொள்ளளவு தனித்தனியே எவ்வளவு என்பதையும்;

(iii) மேற்குறிப்பிட்ட மின் உற்பத்தி நிலையங்களில் புதுப்பிக்கத்தக்க சக்தி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

(iv) மேற்படி மின் உற்பத்தி நிலையங்கள் யாவை என்பதையும்;

(v) மேற்படி ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்திலிருந்தும் பிறப்பாக்கம் செய்யப்படும் மின்சார கொள்ளளவு தனித்தனியே எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தேசிய மின் கட்டமைப்பை விருத்திசெய்வதற்கு வகுக்கப்பட்டுள்ள திட்டங்கள் யாவையென்பதையும்;

(ii) புதுப்பிக்கத்தக்க சக்தியை விருத்திசெய்வதற்கான திட்டங்கள் யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: வலுசக்தி
: ரவீந்திர பண்டார
: தேசிய மக்கள் சக்தி

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom