இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரவி கருணாநாயக்க அவர்களினால் கேட்கப்பட்ட வினா

179/2024

கௌரவ ரவி கருணாநாயக்க,— வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கை மின்சார சபை கூட்டிணைக்கப்பட்ட திகதியையும்;

(ii) இலங்கை மின்சார சபைக்காக அரசாங்கம் முதலீடு செய்​த மொத்த மூலதனத்தையும்;

(iii) இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்ட குறுகிய கால மற்றும் நீண்ட கால கடன்களின் மொத்தத் தொகையை வெவ்வேறாகவும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கை மின்சார சபையில் பணிபுரிகின்ற நிரந்தர மற்றும் அமய ஊழியர்களின் எண்ணிக்கையை தனித்தனியாகவும்;

(ii) 2024 சனவரி முதல் டிசெம்பர் வரை பணியாட்டொகுதியினருக்கு மாதாந்தம் வழங்கப்பட்ட சம்பளம், மேலதிக நேர ஊதியம், தொழில் படிகள், மிகையூதியம், போக்குவரத்துச் செலவுகள் மற்றும் வேறு ஏதேனும் ஊதியங்கள் ஆகியவற்றுக்காக மொத்த​ம் செலவான தொகையை தனித்தனியாகவும்;

(iii) இலங்கை மின்சார சபை அதன் பணியாட்டொகுதியினருக்கான உழைக்கும் போது செலுத்தும் வரியை (PAYE) செலுத்துகிறதா என்பதையும்;

(iv) இன்றேல், உழைக்கும் போது செலுத்தும் வரியை அது செலுத்தாது நிறுத்திய திகதியையும்;

அவர் இச்சபைக்கு மேலும் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: வலுசக்தி
: ரவி கருணாநாயக்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom