இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரவி கருணாநாயக்க அவர்களினால் கேட்கப்பட்ட வினா

178/2024

கௌரவ ரவி கருணாநாயக்க, — நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) தேசிய சேமிப்பு வங்கி கூட்டிணைக்கப்பட்ட திகதியினையும்;

(ii) அதன் தற்போதைய தலைவரினதும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களினதும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியினதும் பெயர்களையும்;

(iii) கிளைகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையினையும்;

(iv) இன்றுள்ளவாறாக பங்குகளுக்காக பெற்றுக்கொண்ட மூலதனம் யாதென்பதையும்;

(v) இது மூலதனப் போதியதன்மைக்கான பேஸல் (BASEL) தேவைப்பாடுகளுடன் இயைபுறுகின்றதா என்பதையும்;

(vi) இயைபுறாவிடின், அதை நிவர்த்திப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) (i) கடந்த 10 வருடங்களுக்கான இலாபம் மற்றும் அடுத்த 3 வருடங்களுக்காக எதிர்பார்க்கப்படும் இலாபம் யாதென்பதையும்;

(ii) மேலே (i) இன் பிரகாரம், கடந்த 10 வருடங்களில் முதலீட்டின் மீதான இலாபம் என்ன என்பதையும்;

(iii) கடந்த 5 வருடங்களில் நிர்வாகச் செலவு மற்றும் கடன் வழங்கல் வரம்பு வீதம் எவை என்பதையும்;

(iv) கடன் வழங்கல் வீதத்தின் சதவீதமாக நிர்வாகச் செலவு என்ன என்பதையும்;

(v) 2019 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை ஐந்தொகைப் பெறுமதிகள் என்ன என்பதையும்;

அவர் மேலும் இச்சபைக்கு வெவ்வேறாக அறிவிப்பாரா?

(இ) (i) 1 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட கடன்கள் பதிவழிக்கப்பட்டனவா என்பதையும்;

(ii) அதனுடன் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் பெயர்கள் என்ன என்பதைம்;

(iii) கடன் பதிவழிப்பதற்காக பின்பற்றப்பட்ட சட்ட நடவடிக்கைமுறைகள் எவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு வெவ்வேறாக அறிவிப்பாரா?

(ஈ) இன்றேல், ஏன்?

: ரவி கருணாநாயக்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom