176/2024
கௌரவ ரவி கருணாநாயக்க,— நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை வங்கி கூட்டிணைக்கப்பட்ட திகதியினையும்;
(ii) இலங்கை வங்கியின் தற்போதைய தலைவரினதும் பணிப்பாளர் சபை உறுப்பினர்களினதும் பிரதம நிறைவேற்று அதிகாரியினதும் பெயர்களையும்;
(iii) கிளைகள் மற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையினையும்;
(iv) இன்றுள்ளவாறாக பங்குகளுக்காகப் பெற்றுக்கொண்ட மூலதனம் யாதென்பதையும்;
(v) இது மூலதனப் போதுநிலைக்கான "பேசல்" (BASEL) தேவைப்பாடுகளுடன் இயைபுறுகின்றதா என்பதையும்;
(vi) இயைபுறாவிடின், அதை நிவர்த்திப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) கடந்த 10 வருடங்களுக்கான இலாபம் மற்றும் அடுத்த 3 வருடங்களுக்காக எதிர்பார்க்கப்படும் இலாபம் என்ன என்பதையும்;
(ii) மேலே (i) இன் பிரகாரம், கடந்த 10 வருடங்களில் முதலீட்டின் மீதான இலாபம் என்ன என்பதையும்;
(iii) கடந்த 5 வருடங்களில் நிர்வாகச் செலவு மற்றும் கடன் வழங்கல் வரம்பு வீதம் எவை என்பதையும்;
(iv) கடன் வழங்கல் வீதத்தின் சதவீதமாக நிர்வாகச் செலவு என்ன என்பதையும்;
(v) 2019 ஆம் ஆண்டு முதல் இற்றை வரை ஐந்தொகைப் பெறுமதிகள் என்ன என்பதையும்;
அவர் இச்சபைக்கு வெவ்வேறாக அறிவிப்பாரா?
(இ) (i) 1 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட கடன்கள் பதிவழிக்கப்பட்டனவா என்பதையும்;
(ii) அதோடு தொடர்புபட்ட நிறுவனங்களின் பெயர்கள் என்ன என்பதைம்;
(iii) பதிவழிப்பதற்காக ஏற்று நடைமுறைப்படுத்தப்பட்ட சட்ட நடவடிக்கை முறைகள் எவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






