இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ரவி கருணாநாயக்க அவர்களினால் கேட்கப்பட்ட வினா

174/2024

கௌரவ ரவி கருணாநாயக்க,— தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) இலங்கையில் கடந்த 5 வருடங்களாக அரச துறையிலும் தனியார் துறையிலும் உள்ள ஊழியப் படையை வெவ்வேறாக யாதென்பதையும்;

(ii) கடந்த 10 வருடங்களில் அரச துறையின் நிரந்தர மற்றும் அமைய ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாவை என்பதையும்;

(iii) கடந்த 10 வருடங்களில் அரச துறையின் ஊழியர்களின் சம்பளங்கள் மற்றும் ஊதியங்களின் மொத்த நிதிச் செலவு யாதென்பதையும்;

(iv) கடந்த 10 வருடங்களில் செலுத்தப்பட்ட ஓய்வூதியத் தொகையின் மொத்தத் தொகை யாதென்பதையும்;

அவர் இச்சபைக்கு வருடாந்த அடிப்படையில் அறிவிப்பாரா?

(ஆ) (i) இலங்கையில் அடுத்த 10 வருடங்களுக்கு அரச துறையினதும் தனியார் துறையினதும் ஊழியப் படையின் முன்கணிப்பு வெவ்வேறாக யாவை என்பதையும்;

(ii) அடுத்த 5 வருடங்களில் பணிக்கு உள்வாங்கப்பட உத்தேசிக்கப்பட்டுள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாவை என்பதையும்;

(iii) அடுத்த 10 வருடங்களுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஓய்வூதியச் செலவுத் தொகை யாதென்பதையும்;

(iv) அடுத்த 10 வருடங்களுக்கு உத்தேசிக்கப்பட்டுள்ள ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை யாவை என்பதையும்;

அவர் இச்சபைக்கு வருடாந்த அடிப்படையில் மேலும் அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

: தொழில்
: ரவி கருணாநாயக்க

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom